×

திட்டத்தால் பிரச்னைகள் வராது 4 மாநிலமும் கண்டிப்பாக பயன்பெறும்: ஸ்ரீனிவாஸ், தேசிய நீர் மேம்பாட்டு முகமை பொது மேலாளர்

சென்னை: மகாநதி-கோதாவரி- கிருஷ்ணா- பெண்ணாறு-பாலாறு-காவிரி-வைகை-குண்டாறு நதிகள் இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின்படி மகாநதி-கோதாவரி-கிருஷ்ணா இணைப்பு திட்டம் 3 கட்டமாக  செயல்படுத்தப்படவுள்ளது. இந்த 3 கட்டத்தை முடித்த பிறகு, கிருஷ்ணா நதி உடன் பெண்ணாறு இணைக்கப்படுகிறது. அதற்கு, தெலங்கானா அரசு இன்னும் அனுமதி கொடுக்கவில்லை. அதன்பிறகு தான் பெண்ணாறு-காவிரி  இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த நதிகள் இணைப்பு திட்டங்கள் அனைத்திற்கும் சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்தந்த மாநில அரசுகளுக்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. ஒடிசா,  தெலங்கானா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு போன்ற மாநில அரசுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில், ஓடிசா, தெலங்கானா, கர்நாடகா மாநிலங்கள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

 ஒடிசா மாநிலம் மணிபத்ரா அணை நீர் பிடிப்பு பகுதிகள் இந்த இணைப்பினால் முழ்கி போய் விடும் என அந்த மாநில அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது. மேலும் இதற்காக அதிகமான நிலங்களை கையகப்படுத்தப்பட வேண்டி இருக்கும்  என்று கருதி அங்கு எதிர்ப்பு பலமாக உள்ளது. தெலங்கானா மாநிலம் இஞ்சம்பள்ளி அணையில் இருந்து பல லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்படவிருக்கிறது. எனவே, அந்த அரசாங்கமும் எதிர்ப்பு தெரிவிக்கிறது.  இந்த திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக அந்தந்த மாநில அரசுகளுடன் தேசிய நீர் மேம்பாட்டு முகமை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த திட்டத்திற்கு அந்த மாநில அரசு ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே மத்திய  அமைச்சரவையின் மூலம் அனுமதி பெற முடியும். கோதாவரியில் இருந்து பைப் லைன் மூலம் தண்ணீர் கொண்டு வருவது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கை தயாரிக்கும் நிபுணர்  குழுவின் இறுதி அறிக்கை தாக்கல் செய்த பிறகு, மாநில அரசுகளின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். மாநிலங்களின் ஒப்புதல் கிடைத்தவுடன் தான், அந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

கோதாவரி- காவிரி இணைப்பு திட்டம் பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. இந்த திட்டத்திற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயார் செய்தும் பல ஆண்டுகளாக இந்த நிலைமையில் தான் உள்ளது. தற்போது தான் இந்த திட்டத்திற்கு  புத்துயிர் அளிக்கும் வகையில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது. நிலம் கையகப்படுத்தும் பணியால் தான் இந்த திட்டம் நிறைவேறாமல் உள்ளது. எனவே, இந்த திட்டத்தை நிறைவேற்ற மாற்றுவழி யோசிக்கப்பட்டு,  அதனடிப்படையில் செயலாக்கத்திற்கு கொண்டு வரப்படுகிறது. அதாவது பைப் லைன் மூலம் தான் இந்த திட்டம் செயல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு நிலம் கையகப்படுத்துவது என்பது குறைவு தான். எனவே,  இந்த திட்டத்தை செயல்படுத்துவதால் எந்த பிரச்சனையும் வராது. இதற்கு, விரிவான திட்ட அறிக்கை விரைவில் தயாரிக்கப்பட்டு, மற்ற மாநிலங்களின் ஒப்புதல் உடன் நிறைவேற்றப்படும். இதனால், 4 மாநிலங்கள் கண்டிப்பாக  பயன்பெறும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. வீணாக கடலில் கலக்கும் நீரை சேமித்து வைக்கும் நோக்கத்தில் தான் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Srinivas ,states ,National Water Development Agency , Mahanadi-Godavari-Krishna-Pillar-Palar-Kaveri-Vaigai-Kundar River Linkage Project, Srinivas, National Water Development Agency General Manager
× RELATED விஜயவாடா நகரில் தாய், மனைவி 2 பிள்ளைகளை...